Homeமலேசியாபிகேபிடி : மெந்தாரி கோர்ட் குடியிருப்பாளர்களின் கட்டாயத் தனிமைப்படுத்தல் வில்லை அவிழ்க்கப்பட்டது !

பிகேபிடி : மெந்தாரி கோர்ட் குடியிருப்பாளர்களின் கட்டாயத் தனிமைப்படுத்தல் வில்லை அவிழ்க்கப்பட்டது !

பெட்டாலிங் | 11/7/2021:-

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள சன்வே மெந்தாரி கோர்ட் அடுக்ககத்தின் குடியிருப்பாளர்களுக்கு இன்று தங்களின் கட்டாயத் தனிமைப்படுத்தளுக்கான கையில் அணியப்பட்ட இள நீல நிற வில்லை அவிழ்க்கப்பட்டது.

இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட நேர்வுகல் பதிவு செய்யப்ப்பட்ட வேளையில், இம்மாதம் முதல் தேதி முதல் இரண்டு வாரங்களுக்குக் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது.

அனைவரும் கட்டாயத் தனைமைப்படுத்தலை தங்கள் வீட்டிலேயே மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சென்று கோவிட்-19 பரிசோதனையை முடித்த பின்னர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் உள்ள நிலவரப்படி, 6,000க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கட்டாயத் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வந்துள்ள மெந்தாரி கோர்ட் அடுக்ககக் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் கையில் இள நீள நிற வில்லை அணிவிக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களாகக் கட்டாயத் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வந்த அவர்களுக்கு அணிவிக்கப்பட்ட வில்லை இன்று அவிழ்க்கப்பட்டது.

அதே வேளையில், பரிசோதனைக்குப் பிறகு தொற்று கண்டவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களுக்கு இரண்டாம் பரிசோதனைக்குப் பிறகே கையில் அணிவிக்கப்பட்ட வில்லையைக் அவிழ்ப்பது குறித்து மாவட்ட சுகாதார அலுவலகம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் 14/7/2021 ஆம் நாள் வரையில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கான அடையாளமான கை வில்லை அவிழ்க்கப்பட்டாலும் அக்கட்டுப்பாடுகைன்னும் தொடர்வதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குக் காத்திருக்க வேண்டும் எனவும் மெந்தாரி கோர்ட் அடுக்ககக் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

spot_img

latest articles

explore more