கோலாலம்பூர் | 20/7/2021 :-
பொது இடத்தில் முகக்கவரி அணியாதவரை அதனை அணியச் சொல்லி அறிவிறுத்தியரை திட்டிய ஆடவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 18 ஆம் நாள் தாமான் டேசா, ஜாலான் டேசா பக்தியில் இருக்கும் காலைச் சிற்றுண்டி விற்கும் கடையில் இச்சம்பவம் நடந்தது.
இன்று காலை அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் அன்னுவார் ஓமார் கூறினார்.
கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் குற்றவியல் தடுப்புச் சட்டம் 117 பிரிவின் படி இரண்டு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்தில் அந்த ஆடவர் தடுத்து வைக்கப்படுவார்.
காலைச் சிற்றுண்டி விற்கும் கடையில் அந்த ஆடவர் முகக்கவரி அணியாமல் இருந்த போது அதனை அணியும்படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால், அவ்வாறு வலியுறுத்தியவரை அந்த ஆடவர் மோசமாகத் திட்டியுள்ளார்.
சூழலைச் சமரசம் செய்ய அந்தக் கடை உரிமையாளரும் அவரது மகளும் முயற்சித்தனர்.
அவ்விவஜாரத்தை அங்கு வந்த இன்னொரு வாடிக்கையாளர் காணொலியாகப் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
கைது செய்யப்பட்ட அந்த ஆடவருக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது தண்டமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.


