கோலாலம்பூர் | 20/7/2021 :-

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும் என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாமி ஃபாட்ஸில் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் காலித் தடுப்பூசி போடப்படும் விவகாரம் குறித்து புகார்கள், தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்பை விற்பது உட்பட அனைத்து விவகாரங்களும் பேசப்பட வேண்டும் என அவர் கூறினார்.

காலித் தடுப்பூசி போடப்படுவதும் தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்பை விற்பதும் நாட்டிற்குச் செய்யும் துரோகமாகும்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரானப் போராட்டத்தில் இது போன்ற துரோகிகளைத் தண்டிக்கப்படுவது குறித்து எதிவரும் 26 ஆம் நாள் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் பேசப்பட வேண்டும்.

கெடா மாநிலத்தில் உள்ள இராணுவப்படை தடுப்பூசி மையத்தில் காலித் தடுப்பூசி தொடர்பான ஒரு புகார் இருப்பதாக கோவிட்-19 தடுப்பூசி செயற்குழு CITF தெரிவித்துள்ளது.

 பாங்கி மாநாட்டு மையம் (BACC), மலேசிய அனைத்துலக கண்காட்சி – வாணிக மையம் (Mitec)ஆகிய இடங்களில் அதே போன்ற புகார்கள் குறித்து தொடர் விசாரணை முன்னெடுக்கப்படும்.

அம்மூன்று இடங்களை உட்படுத்திய புகார்கள் அனைத்தும் இம்மாதம் 17ஆம் நாள் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.