Homeஅரசியல்பொருட்களின் விலையேற்றம் உச்சத்தில் ; எதிர்காலம் குறித்து மக்கள் அச்சத்தில் ! - சிலாங்கூர் எம்ஏபி

பொருட்களின் விலையேற்றம் உச்சத்தில் ; எதிர்காலம் குறித்து மக்கள் அச்சத்தில் ! – சிலாங்கூர் எம்ஏபி

பெட்டாலிங் ஜெயா | 13/12/2021 :-

இன்னும் இரு வாரங்களில் பொருட்களின் விலை உயர்வு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் தெரிவித்திருப்பது ஆறுதல் அளித்தாலும், மக்கள் மத்தியில் இது நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சிலாங்கூர் மாநில தகவல் பிரிவித் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.

மலேசிய வர்த்தக உலகில் உயர்வு கண்ட பொருளின் விலை எந்தக் காலத்திலும் இறங்கியதாக வரலாறு இல்லை. சந்தைகளில் விற்கப்படும் மீன், காய்கறிகளின் விலையில் வேண்டுமானால் ஏற்ற இறக்கம் இருக்கலாமேத் தவிர, மற்ற அடிப்படை உணவுப் பண்டங்களில் விலை, ஒருமுறை உயர்த்தப் பட்டால், மறுமுறை எவ்வளவு சாதகமான சூழ்நிலை இருந்தாலும் வர்த்தகர்கள் பொருளின் விலையைக் குறைப்பதில்லை.

அண்மைக் காலத்தில் உணவுப் பண்டங்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலை ஏகமாக உயர்வு கண்டுவருவது ஒருபுறம் இருக்க, பொருட்களின் எடையையும் குறைத்து விற்பனை செய்கின்றனர்.

பால் மாவு, சவர்க்காரத் தூள் உள்ளிட்ட பெரும்பாலான அத்யாவசிய பொருட்களின் எடையில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை 50 கிராமிலிருந்து 100 கிராம் வரை குறைத்து பொட்டலம் செய்து விற்கின்றனர். இது பழகியதும் அடுத்து சில காலத்தில் விலையை உயர்த்துகின்றனர்.

Vegetable prices in S'pore jump after wet weather in Malaysia, Consumer  News & Top Stories - The Straits Times

இவ்வாறு மாற்றி மாற்றி விலையிலும் எடையிலும் மாற்றம் செய்து பாயனீட்டாளர்களை வஞ்சிக்கும் போக்கு சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடம் அதிகரித்துள்ளது. 2 கிலோ 300 கிராம், 1850 கிராம், 700 கிராம், 300 கிராம் என்றெல்லாம் பொட்டலம் செய்து விற்கப்படுவதால், பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள் ஒரு கிலோ என்னவிலை என்று அறியவோ எளிதில் ஊகிக்கவொ முடிவதில்லை.

1 கிலோ, அரை கிலோ, கால் கிலோ என்று எந்தப் பொருளும் விற்கப்படுவதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பாதிப்பு, வருமான பாதிப்பு என பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் வேளையில், அனைத்துப் பொருட்களின் விலையும் உச்சத்தைத் தொட்டு நிற்பதால், எதிர்கால வாழ்க்கைக் குறித்து அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறை துணை அமைச்சர் இன்னும் இரு வாரங்களில் பொருட்களில் விலை கட்டுக்குள் வரும் என்றார். இப்பொழுது, ஒரு வாரம் கழித்து மீண்டும் அதேக் கருத்தை பிரதமர் தெரிவிக்கிறார்.

மலேசிய குடும்பம் என்ற கொள்கையை பெரிய அளவில் பேசிவரும் இஸ்மாயில் சப்ரி தலைமையிலான அரசாங்கம், உண்மையில் மலேசியக் குடும்பங்களின்மீது அக்கறைக் காட்டுகிறதா என்பது கேள்விக்குரியது என்று மோகன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more