Homeமலேசியா5 மாநிலங்களில் அபாய எல்லையைக் கடந்த 12 ஆறுகளின் நீர் மட்டம் !

5 மாநிலங்களில் அபாய எல்லையைக் கடந்த 12 ஆறுகளின் நீர் மட்டம் !

பெட்டாலிங் ஜெயா | 2/1/2022 :-

கடந்த சில நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் பகாங், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் இருக்கும் 12 ஆறுகளின் நீர் மட்டம் அபாய எல்லையைக் கடந்துள்ளது.

வடிகால், நீர்ப்பாசனத் துறையின் வெள்ளத் தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 12இல் 6 ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் வெள்ள ஏற்படக் கூடிய அபாயமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகாங்

பெராவில் உள்ள செர்த்திங் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 30.5 மீட்டர், ஆனால், தற்போது 32.7 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லிப்பிசில் உள்ள ஜெலாய் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 65.5 மீட்டர், ஆனால், தற்போது 66.13 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாரானில் உள்ள லுயிட் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 28 மீட்டர், ஆனால், தற்போது 28.43 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்டாவில் உள்ள செர்த்திங் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 75 மீட்டர், ஆனால், தற்போது 75.31 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலாங்கூர்

சபாக் பெர்னாமில் உள்ள பெர்னாம் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 2.3 மீட்டர், ஆனால், தற்போது 2.6 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜோகூர்

சிகாம்மாட்டில் உள்ள சிகாம்மாட் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 9.36 மீட்டர், ஆனால், தற்போது 9.14 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்காக்கில் உள்ள செர்த்திங் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 4 மீட்டர், ஆனால், தற்போது 4.25 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான்

ஜெம்போலில் பெக்கான் ரொம்பின் வட்டாரத்தில் உள்ள மூவார் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 33 மீட்டர், ஆனால், தற்போது 37.11 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், கோலா பீலா வட்டாரத்தில் ஓடும் மூவார் ஆற்றின் நீர்மட்டத்தின் அபாய நிலை 63 மீட்டர், ஆனால், தற்போது 63.68 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலாக்கா

அலோர் காஜாவில் வட்டாரத்தில் ஓடும் மலாக்கா ஆற்றின் நீர் மட்டத்தின் அபாய நிலை 11.9 மீட்டர், ஆனால், தற்போது 11.95 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்து ஹம்பார் வட்டாரத்தில் ஓடும் மலாக்கா ஆற்றின் நீர் மட்டத்தின் அபாய நிலை 2 மீட்டர், ஆனால், தற்போது 2.95 மீட்டர் அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளாந்தான் , திரங்கானு ஆகிய மாநிலங்களில் தலா 4 ஆறுகளின் நீர் மட்டம் அபாயா நிலையிலும் மூன்றூ ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் உள்ளன.

spot_img

latest articles

explore more