புக்கிட் சங்காங் | 3/1/2022 :-
புக்கிட் சங்காங் வட்டாரத்தில் கட்னது செல்லும் லங்காட் ஆற்றீன் நீர் மட்டம் அபாய நிலையை மீண்டும் எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 4.29 மிட்டர் அளவைப் பதிவு செய்துள்ளது.
InfoBanjir இணையத் தளத்தின்படி, அவ்வாற்றின் அபாய நிலையான 4.20 மீட்டர் ஆக உள்ள நிலையில், அதைவிட அதிகமாக இன்று காலை 8.000 மணி அளவில் அது 4.29 மீட்டர் எனப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, டெங்கில், சிப்பாங் வட்டாரத்தில் கடந்து செல்லும் லங்காட் ஆற்றின் நீர் மட்ட அபாய நிலையான 6.90 மீட்டரைக் கடந்து 7.09 மீட்டராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சிவப்பு அபாயப் பிரிவாகவும் வகைப் படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிள்ளான் மாவட்டத்தில் கடந்து செல்லும் கிள்ளான் ஆற்றின் நீர் மட்டம் 2.47 மீட்டராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


