Homeமலேசியாமனிதவள அமைச்சர் அலுவலகத்தில் மலேசிய இந்துக் கோவில்களின் அகப்பக்க முகவாயில் உருவாக்கம்

மனிதவள அமைச்சர் அலுவலகத்தில் மலேசிய இந்துக் கோவில்களின் அகப்பக்க முகவாயில் உருவாக்கம்

கோலாலம்பூர் | 3/1/2021 :-

மலேசிய இந்துக் கோவில்களின் தகவல்களைக் கொண்ட அகப்பக்க முகவாயில் (Portel) உருவாக்கப் பணிகள் விரைந்து நடைப்பெற்று வருவதாக மனிதவள அமைச்சரும் ம.இ.கா துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்துள்ளார்.

தன் அமைச்சின் கீழ், ‘கோவில் தகவல் ஒருங்கிணைப்புப் பிரிவு’ என்ற ஒரு தனிப்பிரிவு இந்த உருவாக்க முதற் கட்டப் பணியினைத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். இது குறித்து ஏற்கனவே வெளியிட்ட செய்தியில், இந்த முகவாயில் உருவாக்கத்தின் நோக்கமும், தேவையும் தெளிவாகக் கூறப்பட்டது.

ஜோகூர் மாநிலத்தில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டம்

இந்த முகவாயில் உருவாக்கத்தின் நோக்கமானது மலேசியா கோவில்களின் பின்புலக்குறிப்புகள், கோவில்களின் சிறப்பு அம்சம், விழாக்கள் மற்றும் பல முதன்மைக் குறிப்புகளைப் பதிவேற்றம் செய்வதாகும். இதன் வழி மலேசியாவில் உள்ள இந்துக் கோவில்களின் விவரங்களை ஒரே தளத்தில், தெளிவாக விரிவாகக் காணலாம் என அமைச்சர் அவர்கள் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டம்

மேனாள் பேராசிரியர், டத்தோ முனைவர் பரமசிவம் முத்துசாமி தலைமையில் ஆய்வுக்குழு உருவாக்கி இந்த முயற்சி முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  ஆய்வுக்குழுவினர் தற்சமயம் ஜோகூர், நெகிரி செம்பிலான், பேரா, பினாங்கு மற்றும் கெடா போன்ற மாநிலங்களுக்குச் சென்று கோவில் பொறுப்பாளர்களைச் சந்தித்து அகப்பக்க உருவாக்கப் பணிகளின் தகவல்களுக்கான விளக்கம் அளித்து வருவதோடு மாநில, மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்கள், ஆய்வாளர்களை நியமித்து வருகிறார்கள்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டம்

அகப்பக்க உருவாக்க விளக்க உரைக்குப் பின் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த கோவில் பொறுப்பாளர்கள், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னார்வ முறையில் இத்திட்டத்தில் இணைந்து தகவல்களைச் சேகரிக்க உதவுவதாகக் கூறியுள்ளனர்.

பேரா மாநிலத்தில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டம்

மாநிலந்தோறும் நடைபெற்று வரும் இச்சந்திப்பு விளக்கக் கூட்டமானது அடுத்து கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா, பகாங், கிளந்தான், திரங்கானு, சபா, சரவாக், லாபுவான் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த பொறுப்பாளர்களுடன் விரைவில் நடத்த எற்பாடு செய்யப் பட்டு வருகிறது.

பினாங்கு மாநிலத்தில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டம்

“தொடர்ந்து மாநில, வட்டாரப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதும், தரவுகளைச் சேகரிப்பவர்களுக்குப் பயிற்சிப் பட்டறை நடத்துவதும் இடம்பெறும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தரவுகள் – தகவல்கள் திரட்டும் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்”  என்று முனைவர் பரமசிவம் கூறினார்.

கெடா/பெர்லிஸ் மாநிலத்தில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டம்

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்கள் இருப்பதால்,  சில கோவில்கள் அல்லது நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாத சூழல் அமையலாம். எனவே தங்களின் கோவில் பற்றிய தகவல்கள் இந்த முகவாயிலில் இடம்பெற, ஆலய நிர்வாகத்தினர்  பாலா 011-15781890 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தரலாம். அதிகமான இந்துக்கள் வாழும் மலேசியாவில் ஆலயங்களின் சிறப்புகள் மற்றும் விசேஷங்கள் குறித்த தகவல்களோடு ஒரு முகவாயில் இருப்பது அவசியமான ஒன்று. இந்த பணியைக் கையில் எடுத்திருக்கும் மனிதவள அமைச்சருக்கும் அவர்தம் குழுவினருக்கும் வாழ்த்துக

spot_img

latest articles

explore more