Homeமலேசியாவெள்ளத்தால் 10 மில்லியன் தனியாள், அரசாங்க ஆவணங்கள் பாதிப்பு !

வெள்ளத்தால் 10 மில்லியன் தனியாள், அரசாங்க ஆவணங்கள் பாதிப்பு !

கோலாலம்பூர் | 3/1/2022 :-

நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக ஏறத்தாழ 10 மில்லியன் ஆவணங்கள் சேதமடைந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய சுற்றிலா, கலை, பண்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் நோர் ஸாரி ஹமாட் தெரிவிக்கயில், நிதி தொடர்பான ஆவணங்களும் தனியாள் ஆவணங்களும் சேதமடைந்திருப்பதாகக் கூறினார்.

இலாகாக்களின் கணக்கறிக்கைகள், ஆசிரியர்களைன் கற்பித்தல் திட்டங்கள், கடப்பிதழ் விண்ணப்பங்கள், ஒப்பந்த ஆவணங்கள், குத்தகைகள், வரைபடங்கள், மைக்ரோ ஃபிலிம், எக்ஸ்-ரேய் போன்றவை இந்த வெள்ளப் பேரிடரில் சேதமடைந்துள்ளன.

அவற்றில் பெரும்பான்மை காப்பாற்றப்பட முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Arkib Negara Malaysiaவின் முயற்சியில் பல அரசாங்க அலுவலகங்களில் ஆவணங்களும் பதிவுகளும் காப்பாற்றப் பேருதவியாக இருந்தது என நோர் ஸாரி குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more