தம்புன் | 4/1/2021 :-
மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் உயரிய விருதான சேவை செம்மல் விருது திரு தினேஷ் காளிப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
திரு தினேஷ் காளிப்பன் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தம்புன் கிளையின் தலைவர் ஆவார்.
கடந்த வாரம் தஞ்சோங் புத்ரி கோல்ப் ரிசார்ட்டில் நடைபெற்ற மலேசியா இந்திய இளைஞர் மன்றத்தின் பொதுக்கூட்டம் மற்றும் 30வது ஆண்டு விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தம்புன் கிளை திறக்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 52 நற்செயல்களைச் செய்த காரணத்தினாலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அதில் தஞ்சொங் ரம்புத்தான் தமிழ் பள்ளிக்கும் குனுங் ராபர்ட் தமிழ் பள்ளிக்கும் தலா 50 பி40 மாணவ குடும்பங்களுக்கு உணவுக் கூடை வழங்கப்பட்டது.
சுமார் 550க்கும் மேற்பட்ட பி40 குடும்பங்களுக்கு உணவு கூடையும், இரண்டு குடும்பங்களுக்கு உடல் நிலை பாதித்ததால் தலா RM 2000 – RM 5000 வரை உதவி வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி 3 பிறந்த குழந்தைகளுக்கு அடிப்படை தேவையான பொருட்களையும், ஊனமுற்றோருக்கான அடிப்படையிலான சில பொருட்கள், உணவு கூடை, சக்கர நாற்காலி மற்றும் உடல் ரீதியான பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கும் சில அடிப்படையிலான சேவைகளும் வழங்கப்பட்டது.
இன்னும் பல நற்செயல்களை செய்து வருவதால் மலேசிய இந்திய இளைஞர் மன்றம் தம்புன் கிளையின் தலைவரான திரு தினேஷ் காளிப்பன் அவர்களுக்கும் மற்றும் கிளையின் உறுப்பினர்களின் சேவையின் அடிப்படையில் ‘சேவை செம்மல்’ விருது வழங்கப்பட்டது.


