Homeமலேசியாகோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை கிமீ. 77 – கிமீ 78 மீண்டும் திறக்கப்பட்டது !

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை கிமீ. 77 – கிமீ 78 மீண்டும் திறக்கப்பட்டது !

குவாந்தான் | 4/1/2022 :-

கடந்த மாதம் வெள்ளப் பேரிடர் காரணமாக மூடப்பட்ட கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை கிமீ. 77 – கிமீ 78 மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அளித்த ANIH Berhad நிறுவனத்தின் தலைவர் ரட்ஸிமா முகம்மட் ரட்ஸி தெரிவிக்கயில், மூடப்பட்ட அச்சாலையில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது எனவும் காராக் பட்டணத்திற்குச் செல்பவர்கள் காராக் டோல் சாவடியில் திரும்பிச் செல்ல அவசியமில்லை எனக் கூறினார்.

தற்போதைய நிலையில் கோலாலம்பூருக்குச் செல்லும் சாலை கிமீ 66 முதல் கிமீ 70 வரையில் இரு திசை சாலைகளுமே திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுங்கை டூவா கிமீ 74.8. முதல் கிமீ 77.3 வரையில் உள்ள பகுதியை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறிவிப்புப் பலகையின் வழிகாட்டுதலின் படி சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு மலேசிய நெடுஞ்சாலை வாரியம், ANIH Berhad ஆகியவற்றின் சமூக ஊடகங்கள் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more