Homeவர்த்தகம்பிஎன்பி வழி முன்னேற்றம் காண்பீர்! - வர்த்தகர்களுக்கு கிறிஸ்டினா அழைப்பு

பிஎன்பி வழி முன்னேற்றம் காண்பீர்! – வர்த்தகர்களுக்கு கிறிஸ்டினா அழைப்பு

கோலாலம்பூர்,மே 4-

வர்த்தக துறையில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் கண்டு நல்ல லாபத்தை ஈட்டுவதற்குத் தேவையான வழிகாட்டி மற்றும் தூண்டுகோளை வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் வர்த்தக பங்காளி கூட்டமைப்பின் (பிஎன்பி) தலைவரான கிறிஸ்டினா ஹெலன் ஜோசப்.

ஏ.ஆர். கலைவாணனால் 19 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டதே வர்த்தக பங்காளி கூட்டமைப்பு. இதில் காப்புறுதி, வழக்கறிஞர் துறை,கட்டுமானம், சொத்துடமை, சரக்கு பட்டுவாடா, போக்குவரத்து, நிறுவன பதிவு, நிர்வாக பயிற்சி, நிகழ்ச்சி ஏற்பாடு,காய்கறிகள் விநியோகம், தளவாட பொருள் தயாரிப்பு, பயண மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து வகையான ஒத்துழைப்பையும் வர்த்தகர்களுக்கு வழங்குவதே தங்களின் பிரதான நோக்கம் என்றார் கிறிஸ்டினா.

இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வர்த்தகரும் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அவர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான செயல்களைத் தாங்கள் முன்னெடுத்து வருவதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கிறிஸ்டினா தெரிவித்தார்.

“ சிக்கலை எதிர்நோக்கும் ஒவ்வொரு வர்த்தகரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்வோம். அவர்கள் லாபத்தைப் பெறுவதற்கு ஏதுவாக அனைத்து வகையான அணுகுமுறைகளையும் நாங்கள் கையாள்வோம் ” என்றார் அவர்.

இவற்றைத் தவிர்த்து, இவர்கள் முன்னேற்றம் காண்பதை உறுதிப்படுத்த முகநூல்,இன்ஸ்தாகிராம்,டிக் டாக் போன்ற சமூக வளைத்தளங்களிலும் இவர்களின் வர்த்தகத்தைப் பற்றி விளம்பரப்படுத்த உதவுவோம். இந்த அடிப்படையில் சவால்மிக்க கோவிட் -19 பெருந்தொற்று காலமான கடந்தாண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் மாதம் வரை 10 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி வருமானத்தை உறுப்பினர்கள் ஈட்டியதாக இந்த அமைப்பின் செயலாளரான ஜி.செல்வகுமார் விவரித்தார்.

“ இணையம் வழி நடத்தப்பட்ட வர்த்தக விளக்கக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் வழி இத்தகைய வருமானத்தை வர்த்தகர்களால் ஈட்ட முடிந்தது. இது உண்மையில் வெற்றிகரமான ஒரு முயற்சியாகும்” என்றார் அவர்.

“நாங்கள் சந்திக்கும் நபர்களிடம் எங்கள் இயக்க உறுப்பினர்கள் அனைவரின் வர்த்தகத்தைப் பற்றியும் நாங்கள் எடுத்துரைப்போம். அனைவரும் முன்னேற வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவோம்” என்று அவர் மேலும் சொன்னார்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது, சமூக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை பிஎன்பி முன்னெடுத்து வருகிறது. அடுத்து, வர்த்தகர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியாக வருங்காலத்தில் கூட்டுறவு கழகத்தை அமைக்கத் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக இதன் செயற்குழு உறுப்பினரான சிவகுமார் பழனி குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் செயல்படும் பிஎன்பி அமைப்பை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதன் வழி வழிகாட்டியின்றி தடுமாறிக் கொண்டிருக்கும் வர்த்தகர்களுக்கு உதவ முடியும் என்றார் அவர்.

பிஎன்பி குறித்த் மேல் விவரங்களுக்கு கிறிஸ்டினா 019-2211560, செல்வகுமார் 012-2008334, சிவகுமார் 013-3628421 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம். இதன் இணைய தள முகவரி bnpresources.com.my ஆகும்.

spot_img

latest articles

explore more