Homeசமூகம்தமிழர் திருநாள் & தாய் மொழி நாள் கொண்டாட்டம் 2022

தமிழர் திருநாள் & தாய் மொழி நாள் கொண்டாட்டம் 2022

கோலாலம்பூர், மே. 30-

மலேசியத் தமிழ் அறவாரியம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மொழி மொழியியல் புலம், தமிழ்மொழி காப்பகம், மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம், மலேசிய அறிவகம், பகாங் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர் கழகம், தமிழ் அறம், தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து தமிழர் திருநாள் & தாய் மொழி நாள் கொண்டாட்டம் 2022 எனும் தமிழுணர்வுப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மலேசியத் தமிழர்களிடையே தமிழுணர்வை மேலோங்கச் செய்வதே இத்திட்டத்தின் முகான்மை நோக்கமாகும். இற்றை நாளில் மலேசியத் தமிழரிடையே நலிந்துவரும் தமிழுணர்வை மேலோங்கச் செய்வதன்வழி மொழி, இன மேம்பாட்டுக்கு வித்திடுவதோடு பல வாய்ப்புகளையும் நன்மைகளையும் அடையலாம்.

அதிலும் குறிப்பாகத் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கையும் உயர்த்துவதற்கு இத்தகு திட்டங்கள் பெரிதும் உதவுமென்ற நம்பிக்கையில் மலேசியத் தமிழ் அறவாரியம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழ் அறவாரியம், தமிழர் திருநாள் & தாய்மொழி நாள் விழாவை முன்னிட்டு பாலர் பள்ளி மாணவர் முதற் கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பல தரப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

இப்போட்டிகள் யாவும் தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் பெறுமையையும் நிலைநாட்டியதோடு, சமுதாயத்தில் தமிழ் மொழியுணர்வை மேலோங்கச் செய்வதாகவும் அமைந்ததில் ஐயமில்லை. தமிழ் அறவாரியம் மற்றும் இதர இயக்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த போட்டிகளின் விவரங்கள் பின்வருமாறு:

இந்தக் கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வாக பரிசளிப்பும் தமிழ்க் கலை நிகழ்ச்சியும் எதிர்வரும் 12/06/2022 – ஆம் நாள் மலாயாப் பல்கலைக்கழக வேந்தர் துங்கு மண்டபத்தில் பிற்பகல் மணி 1.30-க்கு இடம் பெறவுள்ளது.

spot_img

latest articles

explore more