Homeசமூகம்எஸ்பிஎம் முடித்த மாணவர்களே…தொடருட்டும் உங்களது சாதனை! தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன்

எஸ்பிஎம் முடித்த மாணவர்களே…தொடருட்டும் உங்களது சாதனை! தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன்

இன்று எஸ்பிஎம் தேர்வில் வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மஇகாவின் தேசியத் தலைவரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் தூதருமான மாண்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். விக்னேஸ்வரன் அவர்கள் பத்திரிகைக்கு விடுத்துள்ள ஓர் அறிக்கையின் வழி தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த எஸ்பிஎம் தேர்வு எழுதிய மணாவர்கள் அனைவரும் கடந்த கல்வி ஆண்டின்போது, கோவிட் -19 பெருந்தொற்று நோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும், கணினி வழி கல்விக் கற்ற வகையிலும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர். குறிப்பாக, பள்ளிக்கு நேரடியாகச் செல்ல முடியாத நிலை – ஐயங்களை தீர்த்துக் கொள்ள முடியாத நிலை – குழு நிலையில் கல்விக் கற்றல் போன்ற வசதிகளை அவர்கள் பெற முடியாமல் இருந்தார்கள். இருப்பினும், இந்தத் தடங்கல்களை எல்லாம் எதிர்கொண்டு, அதிகமான மாணவர்கள் இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

எனவே, வெற்றிப் பெற்ற மாணவர்கள் தொடந்து உங்களது கல்வியைத் தொடருங்கள். உங்களது உயர்க்கல்விக்காக மஇகா எப்போதுமே உங்களது அருகில் இருந்து கொண்டே இருக்கும். கல்விக் கற்பதற்கு நிதியை குறையாக நீங்கள் நினைத்துவிடக் கூடாது. உங்களுக்காக எம்ஐஇடி மற்றும் மஇகாவின் கல்விக் கடனுதவி நிறுவனங்கள் உங்களுக்கு என்றுமே பக்க பலமாக இருக்கும்.

மேலும், அரசாங்க உயர்க்கல்விக் கூடங்களில் இடம் கிடைக்கப் பெறாத – வாய்ப்பு வழங்கப்படாத மாணவர்கள் சோர்வடைந்துவிட வேண்டாம். உங்களுக்காக மஇகாவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரி போன்றவை வாய்ப்புகளை வழங்க காத்துக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு உரிய பாடங்களை – விரும்பிய கல்வித் துறைகளை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயிலலாம். இதனை ஒவ்வொரு மாணவரின் பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன், தேர்வில் வெற்றிப் பெறாத மாணவர்களையும் நான் எனது கருத்தில் கொண்டுள்ளேன். தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற எண்ணத்தை அடியோடு அழித்துவிட்டு, புதிய முறையில் அடுத்த அடியெடுத்து வைக்க வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளர்ந்துவிடக் கூடாது. உங்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன. நீங்கள் உயர்க்கல்வி மட்மின்றி தொழிற்கல்வியையும் பயில்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றிப் பெற்ற மாணவர்களாக இருந்தாலும் சரி, வெற்றிப் பெறாத மாணவர்களாக மாணவர்களாக இருந்தாலும் சரி உங்களது கல்விக்காக பல்வேறு சிரமங்கள் – முயற்சிகள் – போராட்டங்களை எதிர்கொண்ட பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய முயற்சிகளை தொடருங்கள் – வெற்றி உங்கள் பக்கமே என்று மாண்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். விக்னேஸ்வரன் அவர்கள் மேலும் அப்பத்திரிகைச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more