கோலாலம்பூர், ஏப்ரல் 20, 2022 – ஏப்ரல் 20, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு எனும் உள்ளூர் தமிழ் பயணத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

மலேசியர்கள் உற்சாகமாகத் தங்களதுப் பயணத் திட்டங்களைத் தொடங்கவிருக்கும் தருணத்தில், பல்வேறு உள்ளூர் சுற்றுலாத் தளங்களைக் குறைந்தப் பட்ஜெட்டில் எப்படிச் சுற்றி அனுபவிக்கலாம் என்பதுப் பற்றிய நுண்ணறிவுகளை கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு இரசிகர்களுக்கு வழங்கும்.

புலாவ் தியோமான், தைப்பிங், பினாங்கு, மலாக்கா, புலாவ் பெர்ஹென்டியான், கோத்தா பாரு, ஈப்போ, அலோர் ஸ்டார், புலாவ் பங்கோர், ஜோகூர் பாரு, கேமரன் மலை, லங்காவி மற்றும் தாமான் நெகாரா உள்ளிட்டப் பிரபலமான உள்ளூர் சுற்றுலாத் தளங்களை இந்தத் தொடர் சித்தறிக்கும்.

பிரபலமான உள்ளூர் ராப்பரும் தயாரிப்பாளருமான ரெபிட் மேக் தொகுத்து வழங்கும் இந்த 13-அத்தியாயத் தொடர், ஒவ்வொரு சுற்றுலாத் தளத்திலும் கிடைக்கப்பெரும் மலிவானத் தங்குமிடம், உணவு, நினைவுப் பொருட்கள் மற்றும் பலவற்றைப் பற்றியத் தகவல்களைச் சித்தறிக்கும்.

கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு புதன், இரவு 9.30 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.