Homeமலேசியாசிலாங்கூர் மந்திரி புசாருடன் கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தினர் சந்திப்பு

சிலாங்கூர் மந்திரி புசாருடன் கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தினர் சந்திப்பு

கோலாலம்பூர், ஜூன் 29-

     சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் நிவாஸ் ராகவன் தலைமையிலான கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தினர் பரஸ்பர சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

        ஷா ஆலாமில், மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு கூட்டத்தில் நிவாஸ் ராகவனோடு சங்கத்தின் துணைத் தலைவர் விகேகே ராஜசேகரன், உதவி தலைவர் கமால் கம்டார், தலைமைச் செயலாளர் டோனி கிளிபோர்ட், துணை தலைமைச் செயலாளர் மோகனா சின்னத்தம்பி, பொருளாளர் டத்தின் மகேஸ்வரி ராமசாமி மற்றும் சிலாங்கூர் மாவட்டங்களின் ஆலோசகர் ராமன் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக மாநில அரசாங்கம் பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இவற்றிற்கு 94 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் எந்த வகையில் தனது பங்களிப்பை வழங்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இம்மாநிலத்தில் புதிதாக வர்த்தகம் புரிவோர், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஆகியோருக்காக சங்கம் வரைந்திருக்கும் 4 ஆண்டு கால உருமாற்று திட்டம் குறித்து மந்திரி புசாரிடம் நிவாஸ் விளக்கமளித்தார்.

சிலாங்கூர் மாநில இந்திய வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டிற்காக இச்சங்கம் மேற்கொண்டிருக்கும் திட்டங்களுக்கு மாநில அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என்று அமிருடின் உறுதியளித்தார்.

சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் பொருளாதார ஒத்துழைப்பு (சிடேக்) அமைப்பில் இதர பங்காளிகளோடு கோலாலம்பூர் மற்றும்  சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்திருப்பதோடு இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் ஏற்பாட்டிலான தனது வருடாந்திர சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டில் இச்சங்கத்தை ஆதரவு பங்காளியாக அங்கீகரித்தமைக்காகவும் மந்திரி புசாருக்கு நிவாஸ் நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின் இறுதியில் இச்சங்கத்தின் தலைவர் மந்திரி புசாருக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.

spot_img

latest articles

explore more