Homeமலேசியாபேரரசரிடம் உதவித் தொகையைப் பெற்ற 12 மாணவர்கள்!

பேரரசரிடம் உதவித் தொகையைப் பெற்ற 12 மாணவர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 29-

மாட்சிமை தங்கிய பேரரசர் அல் – சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் – முஸ்தபா பில்லா ஷா அவர்கள் இன்று (புதன்கிழமை) இஸ்தானா நெகாராவில் 12 மாணவர்களுக்கு யாங் டி-பெர்துவா அகோங் உதவித்தொகையை வழங்கினார்.

8 பேருக்கு முனைவர் பட்டப் படிப்பை (பிஎச்டி) தொடரவும் மீதமுள்ளவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில் இருவர் வெளிநாட்டில் படிப்பை மேற்கொள்கின்றனர். மற்ற 10 பேர் இந்த ஆண்டு உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி துறையில் தங்கள் மேற்கல்வியை தொடருவார்கள்.

முனைவர் பட்டப்படிப்புக்கான உதவித்தொகை பெற்றவர்களில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மரபியல் அறிவியலில் தனது படிப்பைத் தொடரும் ஆர்கே. தாரிணி (24), மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தில் (யுகேஎம்) மருந்து அறிவியல் ஆராய்ச்சியில் நூர் டினி ஃபாத்தினி முகமது பைசல், (23.) ஆகியோர் அடங்குவர்.

முகமட் முகமது அமீன், 27, (உற்பத்தி பொறியியல், யுகேஎம்); நுர்பாதியா ஸுல்கிப்ளி, 25, (உயிர் வேதியியல், மலாயா பல்கலைக்கழகம்); சையிட் முஹம்மட் இக்பால் சையட் ஓத்மான், 26, (தாவர உயிரி தொழில்நுட்பம்,); நூர் அலியா அஃபிஃபா ஜகாரியா, 24, (வேதியியல், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (யுஎஸ்எம்); சாய் ஜியான் யி, 26, (மருத்துவ அறிவியல், யுகேஎம்) அதோடு சூன் வான் சி, 24, (வேதியியல் பொறியியல், யுஎஸ்எம்). ஆகியோர் உதவித் தொகையைப் பெற்றனர்.

இதனிடையே முதுகலை பட்டப்படிப்புக்காக முதுகலை பட்டப்படிப்புகளுக்கான உமர் அக்பர் கான், 27, (பொருளாதாரம், லண்டன் London School of Economics); தோ லியாங் சு, 25, (தாவர அறிவியல், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்); Ain Nur Afifah Azman, 22, (மரபணு அறிவியல், UKM); நூர்ஸ்யாமிமி ரம்லி, 26, (மருத்துவ அறிவியல், யுகேஎம்). ஆகியோர் உதவித் தொகை பெற்றனர்.

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திலிருந்து இதுவரையில் மொத்தம் 187 நபர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், சட்டம் மற்றும் இஸ்லாமிய நிதி ஆகிய துறைகளில் தங்கள் படிப்பைத் தொடர யாங் டி-பெர்டுவான் அகோங் உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

spot_img

latest articles

explore more