Homeசமூகம்நிதியுதவியை எதிர்பார்க்கும் செலாமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்.

நிதியுதவியை எதிர்பார்க்கும் செலாமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்.

பேரா செலாமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தற்போது மாணவர் கல்வி வளர்ச்சிக்காகவும் பள்ளியின் கட்டிட சீரமைப்பு பணிக்காகவும் நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செலாமா தமிழ்ப்பள்ளி 1953 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பள்ளியாகும். சுமார் 69 ஆண்டு பழமைவாய்ந்த இப்பள்ளியில் தற்போது 147 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பள்ளி கட்டட சீரமைப்பு பணிக்காகவும் நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட பணி இவ்வாண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் இப்பணிக்காக சுமார் ரி.ம 89 000 வரையில் தேவைப்படுகிறது.

தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்காக அனைத்து நல்லுள்ளங்களும் நன்கொடையளித்து ஆதரவு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Nama Akaun :
PER IBUBAPA/GURU-GURU SJKT SELAMA (MAYBANK)

No Akaun :
108216058803

மேல் விபரங்களுக்கு :
திருமதி.பெ.கலைவாணி(தலைமையாசிரியை) – 0174945301
திரு.பா.இராஜகுமார் (பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்) – 0164434907
திருமதி.இராஜேஸ்வரி (பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்) – 0164550183
திரு.பெ.லோகநாதன் (புறப்பாட நடவடிக்கை பொறுப்பாசிரியர் ) – 0195966623

spot_img

latest articles

explore more