Homeசமூகம்நல்லார்க்கினியன் மரபுகவிதைப்போட்டி களம் 4 2021/2022 பரிசளிப்பு விழா

நல்லார்க்கினியன் மரபுகவிதைப்போட்டி களம் 4 2021/2022 பரிசளிப்பு விழா

சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி, இவ்வாண்டு நான்காம் முறையாக நடத்தப்பட்டது.

மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கமாகும். இறையருட்கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின் புனைபெயரான நல்லார்க்கினியன் பெயரில் இப்போட்டி நடத்தப்பட்டு, கடந்த 02 ஜீலை 2022 அப்போட்டியின் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.

“மரபு கவிதையே தமிழ் இலக்கியத்தின் வேர்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நல்லார்க்கினியன் மரபு கவிதைக் களம் 4 போட்டியின் பிரமாண்டமான பரிசளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் பழைய வளாகத்தில் அமைந்துள்ள SITC மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பும், மூத்த மரபு கவிஞர்களுக்குச் சிறப்புச் செய்யும் அங்கமும் இடம்பெற்றது. கவிஞர் கோவதன், கவிஞர் பெ. க. நாராயணசாமி, கவிஞர் பெருங்குளம் ஹஜா, கவிஞர் தமிழன்பன், கவிஞர் காசிதாசன் ஆகிய மூத்த மரபு கவிஞர்களுக்குச் சிற்ப்பு செய்து நல்லார்க்கினியன் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

மேலும், மாணவர் பிரிவில் முதல் நிலையில் நவீன் கணேசன், இரண்டாம் நிலையில் சரண் சுக்லாம் ஆத்மலிங்கம், மூன்றாம் நிலையில் லோகராஜ் மோகன் வென்றனர். இளையோர் பிரிவில் முதல் நிலையில் தங்கமணி சுகுமாறன், இரண்டாம் நிலையில் அ.மு நௌஃபல், மூன்றாம் நிலையில் குமார் துரைராஜூ ஆகியோர் வாகைச்சூடினர்.

பொது பிரிவில் அமிர்தலக்சுமி முதல் நிலையில், ஆசைத்தம்பி இரண்டாம் நிலையிலும், குமரன் வேலு மூன்றாம் நிலையிலும், இவர்களுடன் மூன்று பிரிவிலும் 12 பேர் ஊக்கத்தொகை பரிசையும் வென்றனர். இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக நமது நாட்டின் மனிதவள அமைச்சரும் ம.இ,கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோ சிறீ எம் சரவணன் அவர்கள் கலந்து கொண்டார். இவர் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற 5 ஆண்டுக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்குவதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more