Homeசமூகம்டி.கே மலேசியா 700 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு -டத்தோ மு.கலையரசு

டி.கே மலேசியா 700 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு -டத்தோ மு.கலையரசு

காஜாங், அக்.19-
தீபாவளித் திருநாளை முன்னிட்டு 700 பி40 இந்திய குடும்பங்களுக்கு டி.கே.மலேசியா நேற்று தீபாவளிஅன்பளிப்புகளையும்
ரொக்கத்தையும் வழங்கியது. இந்நிகழ்வு காஜாங் பிரிமா தீபாவளிச் சந்தையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குச் சிறப்பு
விருந்தினராக செமினி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான், உலு லாங்காட் தொகுதி ம.இ.கா. தலைவர்
டாக்டர் வீ.செல்வராஜா, உலு லாங்காட் ம.சீ.ச.வைச் சேர்ந்த டத்தோ லீ பான் செங், தொழிலதிபர் டத்தோஸ்ரீ டாக்டர்
ஜெயசந்திரன் ஆர், டத்தோஸ்ரீ முகமட் சைஃபுல் பஹாரி மாமாட், டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஒமார், நெகிரி செம்பிலான்
மாநில துணை சபாநாயகர் டத்தோ எம்.ரவி உட்பட பல பிரமுகர்கள், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.

இந்த டி.கே. மலேசியா வழங்கிய அன்பளிப்புகளை பி40 பிரிவின் செமினி, காஜாங், உலு லாங்காட், பாங்கி, செராஸ்
ஆகிய இடங்களைச் சேர்ந்த 700 குடும்பங்கள் பெற்றுக் கொண்டதாக டி.கே.மலேசியாவின் ஆலோசகர், டத்தோ
மு.கலையரசு தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

தற்போதைய கோவிட் தொற்று கால கட்டத்தில் மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் அவர்களுக்குத்
தேவையான உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த இயக்கம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு இந்த கால
கட்டத்தில் நிறைய செயல்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கோவிட் தொற்று கால கட்டத்தில் இதே போன்ற பல்வேறு
திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். டிகே மலேசியா கோவிட் தொற்றுக் காலத்தில் நிறைய உதவிகளை
வழங்கியிருக்கிறது. அவற்றில் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண்பதும் அடங்கும். காஜாங், செமினி வட்டாரங்களில்
மட்டுமின்றி நாடு முழுவதும் டிகே மலேசியா ஆலயம், தமிழ்ப்பள்ளிகளில் பல உதவிகளைச் செயல்படுத்தி சமூகப் பிரச்சனைகளுக்கும்
தீர்வுக் கண்டு வருகிறது என்று டத்தோ கலையரசு கூறினார். இந்த தீபாவளி விற்பனை விழா மக்களுக்காக 2ஆவது
முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்வு பொதுத்தேர்தலுக்கு
ஆதரவு திரட்டுவதற்காகச் செய்யப்படவில்லை. இதில் மத்திய அரசு, எதிர்கட்சிகள், அரசு சார்பற்ற இயக்கங்களும் கலந்து
கொண்டு ஆதரவு அளித்தன. அதே சமயம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து 700 குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்புகளை
வழங்கிய டி.கே.மலேசியாக்கு டத்தோ ஜொஹான் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு வெகுவாகப்
பாராட்டினார். இதற்கிடையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு வழி வகுத்த டிகே மலேசியா ஆலோசகர்
டத்தோ கலையரசு, தலைவர் மு.தனபாலன் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்குத் தமது வாழ்த்துகளை டத்தோ ஜொஹான்
தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வு பல உள்நாட்டுக் கலைஞர்களின் பாடல்கள் நடனங்களுடன் நடைபெற்றதில்
1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

spot_img

latest articles

explore more