Homeசமூகம்கம்போங் ஜாவா நில விவகாரம்: டத்தோ ஶ்ரீ மாட் சாபு, டாக்டர் குணராஜ்ஜிடம் மகஜர்...

கம்போங் ஜாவா நில விவகாரம்: டத்தோ ஶ்ரீ மாட் சாபு, டாக்டர் குணராஜ்ஜிடம் மகஜர் ஒப்படைப்பு

கிள்ளான், பிப். 23-
தங்களின் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும்படி  கம்போங் ஜாவா நில உரிமையாளர்கள் மாநில அரசாங்கம், கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ மாட் சாபு மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்  ஆகியோரிடம் மகஜர் வழங்கினர்.

கிழக்கு கரை நெடுஞ்சாலை திட்டத்தால்  (WCE) பாதிக்கப்படும் கம்போங் ஜாவா நில உரிமையாளர்களுக்கு   2017 இல் அன்றைய தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் மற்றும் அஸ்மின் அலி தலைமையிலான மாநில அரசாங்கமும் நிலம் மற்றும் அந்நிலத்தில் கட்டப்பட்ட கட்டடத்திற்கும் முறையே நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்தது. இதற்கான BORANG H எனப்படும் உறுதிப் பத்திரம் 2017 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

8 நிலப்பட்டாக்கள்  தவிர மற்ற எல்லா நிலப்பட்டாக்களுக்கும் முறையே நவம்பர் 2017 இல் பணம் கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த 8 நிலப்பட்டாக்களுக்கும் 2021 வரை பணம் கொடுக்கப்படாத நிலையில்  திடீரென அழைத்து புதிய நில பரப்பளவு வேற்றுமை  காரணமாக பழைய BORANG H   திரும்பப் பெறப்படுகிறது என்றும் புதிய BORANG H தயாரிக்கப்படவிருப்பதாகவும்  அதற்கு முன் தற்காலிக நஷ்ட ஈடு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

தற்காலிக  இழப்பீட்டிற்கான வழிமுறை பின்பற்றாமல் குறிப்பிட்ட தொகைதான் எங்கள் மேலிடம் கொடுக்க ஆனணயிட்டது என்று கூறி  ஒரு தொகையை அவர்களே முடிவு செய்தனர்.
அதற்குப் பிறகு பதிய BORANG H விசாரணையில் இனி நிலத்துக்கு மட்டும் நஷ்ட ஈடு கொடுக்கப்படும்.
கட்டடத்திற்கு மாநில அரசாங்கம் சல்லிக்காசு  கூட கொடுக்கக்கூடாது   என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகக்  கூறி எங்களை திருப்பி அனுப்பினர் என்று பாதிக்கப்பட்டவர்கள்  கூறினர்.

இன்றுவரை  கேட்பாரற்று கிடந்த தங்களுக்கு     டாக்டர் குணராஜ் மற்றும்  டத்தோ ஶ்ரீ மாட் சாபு  இருவரும் இப் பிரச்சனையைத்  தீர்க்க  முன் வந்திருப்பது சற்று ஆறுதலைத் தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

spot_img

latest articles

explore more