spot_img
12.6 C
London
spot_img
Home மலேசியா கல்வி தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் குறித்து கல்வி அமைச்சருடன் கலந்தாய்வு செய்யப்படும் – அமைச்சர்...

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் குறித்து கல்வி அமைச்சருடன் கலந்தாய்வு செய்யப்படும் – அமைச்சர் சிவகுமார்

0
279

புத்ராஜெயா, மார்ச் 7-
அறிவிக்கப்பட்ட புதிய  பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அரசாங்கம்  மிகப்பெரிய மானியத்தை ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.

பள்ளிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் முக்கிய பகுதியாகும்.

அதன் அடிப்படையில் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வசதி குறைந்த பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கும் கணிசமான நிதியை ஒதுக்கி உள்ளார்.

இந்த மறுசீரமைப்பு திட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இடம் பெற்றுள்ளதால் வசதி குறைந்த தமிழ்ப் பள்ளிகள் மேம்பாடு செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட நிதியில் எந்தெந்த தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியங்கள் எவ்வகையில் வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை சிறப்பான முறையில் சீரமைக்க தொடர்ச்சியான பேச்சுவார்த்தை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது நடத்தப்படும் என்று வ சிவகுமார் கூ‌றினா‌ர்.

இதனிடையே, குறைந்த மாணவர்களை கொண்டுள்ள தமிழ்ப் பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்வது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் நமது தமிழ் பள்ளிகளின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.