spot_img
17.5 C
London
spot_img
Home சமூகம் ஜெர்மனியின் ஒற்றுமை தின விழா :அமைச்சர் சிவகுமார் சிறப்பு வருகை

ஜெர்மனியின் ஒற்றுமை தின விழா :அமைச்சர் சிவகுமார் சிறப்பு வருகை

0
193

கோலாலம்பூர்,அக். 4-
பெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி தூதரகத்தால் நேற்று Petaling Jaya Performing Art Centre, One Utama வில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜெர்மனி ஒற்றுமை தின கொண்டாட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.

மீண்டும் இணைந்த ஜெர்மனியின் குறிப்பிடத்தக்க பயணத்தைக் கொண்டாடும் வகையில் ஜெர்மனி ஒற்றுமை தின கொண்டாட்டத்தில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதிப்பது மிகப் பெரிய கௌரவமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெர்மனி ஒற்றுமை தினம் கடந்த அக்டோபர் 3, 1990 அன்று கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஒரு நாடாக இணைந்த வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அரசாங்கத்தின் சார்பாக, ஜெர்மனி ஒற்றுமை தினத்தைக் கொண்டாட அனைத்து ஜெர்மனியர்களுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன் என்று சிவகுமார் சொன்னார்.