spot_img
15.7 C
London
spot_img
Home கலை உலகம் ரசிகர்களைக் கவர்ந்த ‘வசீகரா’ குறும்படம்

ரசிகர்களைக் கவர்ந்த ‘வசீகரா’ குறும்படம்

0
261

கோலாலம்பூர், அக்.5-

ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கும் நோக்கத்தில் பண்பட்ட நடிகர் காற்றேஜெயின் இயக்கத்தில் அண்மையில் திரையீடு கண்டது ‘வசீகரா’ குறும்படம்.

கதாநாயகனாக  காற்றே ஜெயும் கதாநாயகியாக  தேவகன்னியும்   நடித்திருக்கும் இந்தக் குறும்படம் தலைநகர்,கொலிசியம் திரையரங்கில் அண்மையில் அதிகாரப்பூர்வமாகத் திரையீடு கண்டது.

சாய் கோகிலா மற்றும் சில புதுமுகங்கள் நடித்திருக்கும்  இக்குறும்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது அவர்கள் வழங்கிய கருத்துகள் வழி அறியப்பட்டுள்ளது.

காற்றேஜெ  உணர்ச்சிபூர்வமான நடிப்பை வழங்கியிருக்கும் இந்தக் குறும்படம் நேற்று  பிரிக்ஃபீல்ட்ஸ்,  நூ சென்ரல் திரையரங்கிலும் திரையீடு கண்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களுக்கு ஏற்ற உணர்ச்சிப்பூர்வ நடிப்பு,  நல்ல காட்சியமைப்பு, சிறந்த தொழில்நுட்பம், பொருத்தமான  வசனங்கள் என கச்சிதமாக அமைந்த இந்தக் குறும்படத்தை ஒரு திரைப்படமாக எடுக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாக இதன் தயாரிப்பாளருமான காற்றேஜெ விவரித்தார்.