spot_img
13.2 C
London
spot_img
Home ஆன்மீகம் கலை ,கல்வி, கலாச்சாரத்தைப் புகட்டும் சரஸ்வதி பூஜை!- கவிமாறன்

கலை ,கல்வி, கலாச்சாரத்தைப் புகட்டும் சரஸ்வதி பூஜை!- கவிமாறன்

0
450

கோலாலம்பூர், அக்.24-

சிறார்களுக்கு கலை ,கல்வி, கலாச்சாரத்தைப் புகட்டும் ஓர் உன்னத விழா சரஸ்வதி  பூஜையாகும் என்று கவிமாறன் கூறினார்.

“மாணவர்களின் சிறந்த எதிர்காலம் கல்வி கேள்விகளிலும் ,கலை கலாச்சாரங்களிலும் அடங்கியுள்ளது. இதனை சிறு வயது முதலே கற்றுக் கொள்வது இவர்கள்  நல்ல பிள்ளைகளாக உருவாக வழி வகுக்கும்” என்று இங்குள்ள ஹவுஸ் ஆஃப் இசை ஹெரிதேஜ் மையத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற பக்தி பரவசமிக்க  பாடல்கள், நடனங்கள் மற்றும்  இசை கருவி வாசிப்பு சரஸ்வதி  பூஜைக்கு மேலும் மெருகூட்டியது.

ஹவுஸ் ஆஃப் ஹெரிதேஜ் தோற்றுநர் தேவி லெட்சுமணன், கிரி, நாட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் லோக் அப் நாதன், பாடகர் பாபுலோகநாதன், பெற்றோர்கள் ஆகியோரோடு  சுமார் 100 மாணவர்கள் இப்பூஜையில்  கலந்து கொண்டனர்.

.