spot_img
14.9 C
London
spot_img
Home சமூகம் பெர்னாமாவின் முதல் பெண் தலைமை ஆசிரியராக நூருல் அஃபிடா கமாலுடின் நியமனம்!

பெர்னாமாவின் முதல் பெண் தலைமை ஆசிரியராக நூருல் அஃபிடா கமாலுடின் நியமனம்!

0
239

கோலாலம்பூர், அக்,24-

தேசிய செய்தி நிறுவனத்தின் (பெர்னாமா)  புதிய தலைமை ஆசிரியராக நூருல் அஃபிடா கமாலுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் இப்பதவி இன்று முதல் நடப்புக்கு வருவதாக பெர்னாமா அறிவித்தது.

இதன்வழி கடந்த 1967 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் முக்கிய பதவியை அலங்கரிக்கும்  முதலாவது பெண் என்ற வரலாற்றை நூருல் அஃபிடா (56) படைத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற  ஜமாலுடின் முகமதுவிற்குப் பதிலாக நூருல் அஃபிடா இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து  வகித்து வரும் செய்தி பிரிவு துணை தலைமை ஆசிரியர் பொறுப்பு உட்பட நூருல் அஃபிடா பெர்னாமாவில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜமாலுடின், செய்தி சேகரிப்பு துறையில்  இவர்  பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்றார்.

-பெரித்தா ஹரியான்