கோலாலம்பூர் நவ 1-
மனித வள மேம்பாட்டு கழகம் (எச்ஆர்டி கார்ப்) ஏற்பாட்டில் நேற்று சிறந்த மனிதவள பயிற்சியாளர்கள் 44 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
தேசிய அளவில் மனிதவள மேம்பாட்டில் தனித்து நிற்கும் 44 பயிற்சியாளர்களின் சிறந்த சாதனைகள், பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் எச்ஆர்டி கோர்ப் இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
முதலாளிகளை அங்கீகரிக்கும் மனிதவள அமைச்சரின் விருது, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான எச்ஆர்டி கோர்ப் விருது, பயிற்சியாளர்களுக்கான விருதுகள் என்று முன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
எதிர்கால திறன்கள், பட்டதாரி மேம்பாடு, கற்றல் தொழில் நுட்பம், நிலையான வளர்ச்சி, திவேட், மனிதவள மேம்பாடு ஆகியவற்றிற்கான சிறப்பு விருதுகளும் இதில் அடங்கும்.
மே பேங்க், பெட்ரோனாஸ், போஸ் மலேசியா, இண்டா வாட்டர், ரிவர்டெக்ஸ் மலேசியா, தஞ்சோங் லெப்பாஸ் துறைமுகம் ஆகியவை விருது பெற்ற நிறுவனங்களில் அடங்கும்.
இதன் உச்சகட்டமாக உலகமெங்கும் பேறு குறைந்தோர் சமூகத்திற்கு முன்னோடியாக இருக்கும் கத்தாரைச் சேர்ந்த கானிம் அல் முவ்தாவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படிலா யூசுஃப், மனித வள அமைச்சர் வ சிவகுமார் ஆகியோர் சாதனையாளர்களுக்கு விருதுகளை எடுத்து வழங்கினர்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் ஹமீது இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார் .




