கோலாலம்பூர் நவ 5-
இத்தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தலைநகரில் செயல்படும் ஜெயபக்தி நிறுவனம் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த வசதி குறைந்த 300 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு மற்றும் சமையல் பொருட்களை வழங்கியது.
ஜெயபக்தி நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியின்போது வசதி குறைந்த மக்களுக்கு இதுபோன்ற உதவியை வழங்கி வருவது பாராட்டுக்குரியது என்று இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த மனித வள அமைச்சர் வ. சிவகுமார் குறிப்பிட்டார்.
அந்த வகையில் இவ்வாண்டும் 300 பேருக்கு ஜெயபக்தி நிறுவனம் தீபாவளி அன்பளிப்பை வழங்கியுள்ளது. இது சம்பந்தப்பட்ட குடும்பங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என்று அவர் கூறினார்.
நாட்டின் பிரசித்தி பெற்ற ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தலைமையில் நேற்று 300 பேர் அமைச்சரிடமிருந்து தீபாவளி அன்பளிப்புகளைப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், விலாயா மாநில கெஅடிலான் இளைஞர் பகுதி தலைவர் ஜோனாதன், டாக்டர் பி. எஸ். பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




