spot_img
14.8 C
London
spot_img
Home சமூகம் மகளிர் பிரிவுக்கு உதவி தலைவர் பதவி வழங்குவீர்! -டத்தோ மோகனா

மகளிர் பிரிவுக்கு உதவி தலைவர் பதவி வழங்குவீர்! -டத்தோ மோகனா

0
239

கோலாலம்பூர், நவ.5-
மஇகாவின் மேம்பாட்டிற்கு ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றி வரும் அதன் மகளிர் அணியினருக்கு கட்சியின் உதவி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தலைநகரில் நடைபெற்ற மஇகா மகளிர் பிரிவு பேராளர் மாநாட்டில் முன் வைக்கப்பட்ட தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும் என்று இப்பிரிவின் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி தெரிவித்தார்.

“இந்தத் தீர்மானம் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்” என்றார் மோகனா.

இங்குள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றில் நேற்று நடைபெற்ற மஇகாவின் இளைஞர், மகளிர்,புத்ரா, புத்ரி மாநாடுகளை கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் இளைய சகோதரரின் அகால மறைவால் மிக விமரிசையாக நடைபெற வேண்டிய மாநாடுகளை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எளிமையாக நடத்தும்படி சரவணன் கேட்டுக் கொண்டார்.