spot_img
14.7 C
London
spot_img
Home சமூகம் டத்தோஸ்ரீ வான் அஜிஸா தலைமையில் பண்டார் துன் ரசாக்கில் 400 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு!

டத்தோஸ்ரீ வான் அஜிஸா தலைமையில் பண்டார் துன் ரசாக்கில் 400 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு!

0
214

கோலாலம்பூர், நவ.5-

வசதி குறைந்தவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் வரும் தீபாவளியை  இனிதே கொண்டாடி மகிழும் வகையில்  பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 400 பேருக்கு அன்பளிப்புகள்  வழங்கப்பட்டன.

செராஸ், ஸ்ரீ ஜோகூர் குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீபாவளி கொண்டாட்டம்’ எனும் இந்நிகழ்ச்சிக்கு பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோஸ்ரீ வான் அஜிஸா வான் இஸ்மாயில் சிறப்பு வருகை புரிந்து மக்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்.

“இது எல்லா இனத்தவர்களும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பெருநாள். ஒருவர் மற்றவரை அறிந்து கொண்டு சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்கு நல்லதொரு பாலமாக இந்நிகழ்ச்சி  அமைகிறது” என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் வான் அஜிஸா குறிப்பிட்டார்.

“மலாய்க்காரர், சீனர், இந்தியர் , கடாசான் என பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் ஓர் இனத்தவரின் பெருநாளில் மற்ற இனத்தவர்கள் பங்கு கொள்வது ஒருவரின் கலாசார கூறுகளைப் புரிந்து கொள்ள உதவும்” என்றார்.

மக்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு  இவர்களுக்கு  இரட்டிப்பு  மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என்று கெஅடிலான் பண்டார் துன் ரசாக் தொகுதி உதவி தலைவர் ஜோனாதன் வேலா தெரிவித்தார்.

“இந்த அன்பளிப்பு  நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தோடு சந்தோசஷமாகத் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது ” என்று கெஅடிலான் பண்டார் துன் ரசாக் தொகுதி ஏற்பாட்டிலான நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கூறினார்.

மதிய உணவு, ஆடல் ,பாடலுடன்  கூடிய  இசை நிகழ்ச்சி, அதிர்ஷ்ட குலுக்கு  என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய இந்தத் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கெஅடிலான் பண்டார் துன் ரசாக் தொகுதி  தலைவர் டத்தோ அஸ்மான் அபிடின், செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாம் ஹாலிம் ஜமாலுடின் உள்ளிட்ட பல பிரமுகர்களோடு சுற்று வட்டார மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். 

.