spot_img
14.7 C
London
spot_img
Home சமூகம் பண்டார் துன் ரசாக்கில் தீபாவளி கொண்டாட்டம்!

பண்டார் துன் ரசாக்கில் தீபாவளி கொண்டாட்டம்!

0
313

கோலாலம்பூர், நவ.7

செராஸ், ஸ்ரீ ஜோகூர் குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீபாவளி கொண்டாட்டம்’ எனும் இந்நிகழ்ச்சிக்கு பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வான் அஜிஸா வான் இஸ்மாயில் சிறப்பு வருகை புரிந்து மக்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்.

மக்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு இவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என்று கெஅடிலான் பண்டார் துன் ரசாக் தொகுதி உதவி தலைவர் ஜோனாதன் வேலா தெரிவித்தார்.

மதிய உணவு, ஆடல் ,பாடலுடன் கூடிய இசை நிகழ்ச்சி, அதிர்ஷ்ட குலுக்கு என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய இந்தத் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கெஅடிலான் பண்டார் துன் ரசாக் தொகுதி தலைவர் டத்தோ அஸ்மான் அபிடின், செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாம் ஹாலிம் ஜமாலுடின் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு வருகை

அதே வேளையில், கெஅடிலான் வாங்சா மாஜூ தொகுதி தலைவர் என்றி லாய் உட்பட கெஅடிலான் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

.