spot_img
14.7 C
London
spot_img
Home சமூகம் பிரிக்ஃபீல்ட்ஸில் தேசிய புகார் மையத்தின் தீபாவளி இன்னிசை நிகழ்ச்சி!

பிரிக்ஃபீல்ட்ஸில் தேசிய புகார் மையத்தின் தீபாவளி இன்னிசை நிகழ்ச்சி!

0
223

கோலாலம்பூர், நவ.6-

தங்களின் வருடாந்திர தீபாவளி  நிகழ்ச்சியாக தேசிய புகார் மையம் இவ்வாண்டும் தலைநகர் பிரிக்ஃபீல்ட்ஸில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய கலைநிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.

இந்நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு   ஜாலான் துன் சம்பந்தனில் நடைபெறும் என்று தேசிய புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் தெரிவித்தார்.

“இங்குள்ள கடைகளில் புத்தாடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்காக வரும்   மக்களிடையே உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கக்கூடிய இந்நிகழ்ச்சி தீபாவளி பண்டிகை குதூகலத்தை ஏற்படுத்தும்” என்று இந்நிகழ்ச்சியையொட்டி  இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

பொதுவாக பிரிக்ஃபீல்ட்ஸ் என்றாலே அது வர்த்தக தலங்கள், உணவகங்கள், போக்குவரத்து போன்றவற்றைக் கொண்ட ஒரு பகுதியாகத் திகழ்வதால்  இது சுற்றுப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த இடத்தில் தாங்கள் நடத்தும்  தீபாவளி நிகழ்ச்சிக்கு சுற்றுலா துறை ஆதரவு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

“தனித்து வாழும் தாய்மார்கள், மாணவர்கள்  என வசதி குறைந்த 500 பேருக்கு இந்நிகழ்ச்சியில் நாங்கள் உதவி செய்யவிருக்கிறோம். இதற்காக இவர்கள் முன்கூட்டியே தங்களைப் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

அதிகமானோருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அரசாங்கத்தின் உதவி கிடைக்குமேயானால் இது சாத்தியமாகும் என்றார் அவர்.

தீபாவளி சந்தைகள், கலை நிகழ்ச்சிகள் என தீபாவளி பண்டிகை காலத்தில் களை கட்டும் பிரிக்ஃபீல்ட்ஸ் தீபாவளி சந்தை  பகுதி அரசு பதிவேட்டில் இடம் பெற வேண்டும் என்றும் சந்திரகுமணன் குறிப்பிட்டார்.

இந்த மூன்று தினங்களும்  உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி மாலை 6.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெறும். காலையில் இந்தியாவைச் சேர்ந்த  ஆயூர்வேத சிகிச்சை மருத்துவரை தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் இவரிடமிருந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என்று இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய புகார் மையத்தின் துணைத் தலைவர் எண்டி செங்கையா விவரித்தார்.