கோலாலம்பூர், நவ.10-
கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகம் மலூரி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 100 பேருக்கு உணவு கூடைகளை வழங்கி அவர்களிடையே தீபாவளி உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த உன்னத திருநாளில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக மனித வள அமைச்சர் வ.சிவகுமார் சமையல் பொருட்கள் அடங்கிய உணவு கூடைகளை வழங்கியுள்ளார். இது அவரின் பரிவையும் அக்கறையுமே காட்டுகிறது என்று கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ்.பிள்ளை குறிப்பிட்டார்.
எல்லோரும் இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டு அமைச்சர் இந்த உணவு கூடைகளை வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது. இவ்வேளையில் அமைச்சருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று மலூரி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100 பேருக்கு உணவு கூடைகள் வழங்கிய நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் அவர் குறிப்பிட்டார்.
.
அனைவரும் குடும்பத்தோடு ஒன்றிணைந்து சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று டாக்டர் பி.எஸ்.பிள்ளை கேட்டுக் கொண்டார்.




