கோலா பெர்லிஸ், நவ.16-
விவசாயம் மற்றும் உணவு உணவு உத்தரவாதத்திற்கான அமைச்சும் நெல், அரிசி கண்காணிப்பு அமைப்பும் இணைந்து வெள்ளை அரிசிக்கு ஒற்றைத் தரத்தை உருவாக்க வேண்டும். அதை வழக்கம் போல் உள்நாட்டு வெள்ளை அரிசி மற்றும் இரக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி என்று முத்திரையிட வேண்டியதில்லை என்று மலேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சம்மேளனத் தலைவர், மார்ஸுக்கி ஒத்மான் வலியுறுத்தினார்.
இது மொத்த வணிக ரீதியில் எந்த கையாளும் நடவடிக்கையும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமின்றித் தாங்கள் வாங்கும் அரிசியில் பயனீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதையும் தவிர்க்க வகை செய்கிறது.
இந்நிலையில் உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் கலந்து அதை முழுமையான இறக்குமதி செய்யப்பட்ட அரிசியாகக் கட்டுப்படுத்தப்படாத விலையில் ஒருசில மொத்த வணிகர்கள் விற்பனைச் செய்கின்றனர்.
நம் உள்நாட்டு அரிசி மிகவும் தரம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவோம். இதில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் போது இரு தர அரிசியும் வெவ்வேறு விலையில் கிடைக்காது. வரும் காலங்களில் இவற்றின் விலை உயர்ந்தாலும் மோசடிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய போது மார்ஸுக்கி ஒத்மான் குறிப்பிட்டார்.




