spot_img
14.2 C
London
spot_img
Home சமூகம் அந்நிய தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காத முதலாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

அந்நிய தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காத முதலாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

0
188

சுபாங் ஜெயா, டிச 7-

அந்நிய வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து, மலேசியா வந்தவுடன் அவர்களுக்கு வேலை கொடுக்காத முதலாளிமார்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சர், வ.சிவகுமார் எச்சரித்தார்.

இந்த முதலாளிகளுக்கு எதிராக மனித வள அமைச்சு உறுதியான நடவடிக்கை எடுக்கும் .

”இந்த முறைகேடு செய்த முதலாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையை எடுக்க மனிதவளத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது”.

“நாட்டின் நற்பெயரைப் பாதுகாப்பது முக்கியம் என்பதால் இந்த விவகாரத்தை நான் கடுமையானதாகக் கருதுகிறேன் என்று மலேசிய இந்தியர் உணவகங்கள் சங்கத்தின் 23ஆம் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் குறிப்பிட்டார்.