spot_img
14.8 C
London
spot_img
Home சமூகம் அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி திடல் விவகாரம்:விரைவில் மந்திரி பெசாரை சந்திப்பேன்!-டத்தோ நெல்சன் ரெங்கநாதன்

அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி திடல் விவகாரம்:விரைவில் மந்திரி பெசாரை சந்திப்பேன்!-டத்தோ நெல்சன் ரெங்கநாதன்

0
196

 

டிங்கில், டிச.9-

இங்குள்ள அம்பர் தெனாங் தோட்டத்  தமிழ்ப்பள்ளி திடல் விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில்   மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியை  தாம் விரைவில்  சந்திக்கவிருப்பதாக மஇகா கல்வி குழு தலைவர்  செனட்டர் டத்தோ  டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்தார்.

இந்தத் திடலை அதே இடத்திலேயே தக்க வைத்துக் கொள்வதோடு இதன் ஒரு பகுதியை  பள்ளி முழுமையாகப்  பயன்படுத்துவதற்கு மேம்பாட்டு நிறுவனம் அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன்.

மழைக் காலங்களில் திடலில் வெள்ளம் சூழ்ந்து கொள்வதால் மாணவர்கள் திடலைப் பயன்படுத்த முடியாமல் போகிறது என்று  திடலின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக நேற்று இப்பள்ளிக்கு  வருகை  மேற்கொண்ட பின்னர் செய்தியாள்ர்களிடத்தில் பேசினார்.

இப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார இளைஞர்களும் இத்திடலை காற்பந்து விளையாட்டிற்காகப்  பயன்படுத்தி வருவதாக அறியப்படுகிறது.

நல்ல வசதியுடன் கூடிய இப்பள்ளித் திடலின் ஒரு பகுதியை  மேம்பாட்டு நிறுவனம் பள்ளி மாணவர்களின் பயனீட்டிற்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இப்பள்ளி மேலாளர் வாரிய குழு தலைவர் டத்தோ குணாளன் வேலு கூறினார்.

இப்பள்ளியின் அருகே உள்ள திடலின் ஒரு பகுதி சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் கீழ் உள்ளது.இதில் தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக் காலங்களில்  இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு வருவதையும்  அவர்  சுட்டிக் காட்டினார்.

“இந்தத் திடலை பள்ளிக்குச் சொந்தமாக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக நாங்கள் போராடி வருகிறோம்.  நகராண்மைக் கழகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள பள்ளித் திடலை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்   ” என்றார் மஇகா சிப்பாங் தொகுதி தலைவருமான  குணாளன்.