spot_img
14.8 C
London
spot_img
Home மலேசியா கல்வி உயர்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்கள் சேர்ப்பு: 7 விழுக்காட்டை எட்ட வேண்டும்!...

உயர்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்கள் சேர்ப்பு: 7 விழுக்காட்டை எட்ட வேண்டும்! – டத்தோ லோகநாதன் கோரிக்கை

0
636

செர்டாங், டிச.10-

      நாட்டிலுள்ள உயர்கல்வி  நிலையங்களில் புதிதாகச் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 7 விழுக்காடாக நிர்ணயிக்கும்படி  அரசாங்கத்தை  ஐ.பி.எப். தேசியத் தலைவர், டத்தோ லோகநாதன்  கேட்டுக் கொண்டார்.

     தகுதியான மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் இடம் கிடைப்பதற்கு இதன் வழி உறுதிப்படுத்தலாம் என்று இங்குள்ள டான்ஸ்ரீ எம்ஜி.பண்டிதன் கட்டட மண்டபத்தில் நடைபெற்ற 31ஆவது ஐ.பி.எப். பொதுப் பேரவையில் கொள்கை உரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

      ஐ.பி.எப். முன்னாள் தலைவர், அமரர் டத்தோ எம்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட செனட்டர் பதவியைக் கட்சிக்குத் தொடர்ந்து வழங்கும்படி அவர் கோரிக்கை விடுத்தார். இது கட்சிக்கு வழங்கப்படும் ஓர் அங்கீகாரம் ஆகும் என்றார்.

      தொடர்ந்து, அரசு தொடர்பு நிறுவனங்களில் ஐ.பி.எப். கட்சிப் பொறுப்பாளர்களை நியமிக்கும்படியும் லோகநாதன் கேட்டுக் கொண்டார். 

     மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு  அவர்களோடு அணுக்கமான உறவைப் பேண நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் அவர் கோரிக்கை விடுத்தார்.

      அம்னோ தலைமைச் செயலாளர், டத்தோ அஸ்ராஃப் வாஜ்டி டுசுக்கி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த இம்மாநாட்டில் கிம்மா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மக்கள் சக்தி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ரமேஷ், டத்தோஸ்ரீ வனத்தையா அந்தோணி, டயானாஸ் கேட்டரஸ் உரிமையாளர் பி.எம்.சாமி, டத்தின் ஜெயலெட்சுமி சம்பந்தன், அம்னோ, ம.சீ.ச., சிந்தா போன்ற கட்சிகளின் பொறுப்பாளர்கள், ஐ.பி.எப். உச்சமன்ற உறுப்பினர்கள், கிளை, தொகுதி மற்றும் மாநில பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.