spot_img
17.5 C
London
spot_img
Home சமூகம் சமூகநல இல்ல சிறார்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! பி.கே.ஆர் வங்சா மாஜு ஏற்பாடு

சமூகநல இல்ல சிறார்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! பி.கே.ஆர் வங்சா மாஜு ஏற்பாடு

0
328


கோலாலம்பூர், டிச.13-

தலைநகர், ஸ்தாபாக்கில் ஜோனா மற்றும் எஸ்டர் பாதிரியார் தம்பதியரால் தொடங்கப்பட்ட ‘த கொம்ஃபோர்ட்டர் ஹோப்’ ஆதரவற்றோர் இல்லம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அருகிலுள்ள தேவாலயம் ஒன்றின் பாதிரியார்களான இவர்கள் இந்த இல்லத்தை தாமான் பீ.ரம்லியில் கடந்த 20 ஆண்டுகளாக வழிநடத்தி வருகின்றனர். இங்கு 20 சிறார்கள் இருக்கின்றனர்.
இதில் ஜோனா காலமாகி விட்டார் என்பதால் இந்த இல்லத்தில் இவ்வாண்டுக்கான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

இத்தகவல் தெரிய வந்ததைத் தொடர்ந்து வங்சா மாஜு பி.கே.ஆர் மடானி கெஅடிலான் கிறிஸ்துமஸ் பயணத்தைத் தொடங்கியது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் மரம் வழங்கப்பட்டு இதை அலங்கரிக்கும் பணியில் கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டதாக கட்சியின் தகவல் பிரிவு தலைவரும் இந்நிகழ்ச்சியின் நிர்வாகியுமான ஆர்.விஜேந்திரன் தெரிவித்தார்.



இந்த இல்லத்தில் இவ்வாண்டு சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் இல்ல இடமாற்றம், தோற்றுநர் பாதிரியார் ஜோனாவின் மறைவு ஆகியவை அடங்கும். கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது சிறார்களை மகிழ்விப்பது மட்டுமின்றி அவர்களுக்கிடையிலான நல்லுறவையும் ஊக்குவிக்கும் என்று விஜய் குறிப்பிட்டார்.