spot_img
20.4 C
London
spot_img
Home சமூகம் மடானி மருத்துவ திட்டம்: 1 மில்லியனுக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பதிவு -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

மடானி மருத்துவ திட்டம்: 1 மில்லியனுக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பதிவு -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

0
225

கோலாலம்பூர், டிச.15-

   மடானி மருத்துவ திட்டம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட தனியார் கிளினிக்குகளில் சாதாரண நோய்களுக்கான இலவச சிகிச்சைக்கு 1,000,000க்கும் மேற்பட்ட நோயாளிகளின் வருகையை மடானி மருத்துவ திட்டம் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

    இதில் நேற்று வரை வெ.6.25 கோடி ஒட்டுமொத்தச் செலவில் 2,506 தனியார் கிளினிக்குகள் வாயிலாக 785,623 நோயாளிகளுக்கு 1,005,645 சாதாரண சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இத்திட்டத்தை அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2024 வரவு செலவு திட்டத்தில் வெ.10 கோடியை ஒதுக்கியதன் வாயிலாக தனது இணக்கத்தை அரசு வெளிப்படுத்தியுள்ளது.

    அந்த வகையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் தரமான சுகாதார சேவையை விரிவுபடுத்த நாடு முழுவதும் உள்ள தனியார் கிளினிக்குகளின் ஈடுபாட்டை அதிகரிப்பதில் அமைச்சு மற்றும் புரோடெக் ஹெல்த் நிறுவனமும் தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்று ஓர் அறிக்கையில் டாக்டர் ஸுல்கிப்ளி குறிப்பிட்டார். 

-பெர்னாமா