spot_img
10.4 C
London
spot_img
Home சமூகம் மார்ச் 1 முதல் ஹாசில் இணைய தளத்தில் மூலதன இலாப வரி படிவம் பதிவேற்றம்!

மார்ச் 1 முதல் ஹாசில் இணைய தளத்தில் மூலதன இலாப வரி படிவம் பதிவேற்றம்!

0
355

கோலாலம்பூர், ஜன. 25-

வரி செலுத்துவோருக்கு வசதியாக மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் (ஹாசில்) வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் மூலதன இலாப வரி படிவத்தை (பி.என்.சி.கே.எம்.) தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவிருக்கிறது.

வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி இவர்கள் தங்களின் மூலதன இலாப வரி படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கு இது ஒரு வழிகாட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆவணத்தைப் பின்வரும் எளிதான வழிகள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்:-

i. ஹாசில் அதிகாரப்பூர்வ இணையத் தளம் www.hasil.gov.myஐ வலம் வரலாம்.

ii. Borang > Program Memfail Borang Nyata CKM என்ற பட்டியைச் சொடுக்கவும்.

iii. அல்லது பின்வரும் இணையத் தளத்தின் மூலம் விரைவாக அணுகலாம்.

மலாய் மொழி பதிப்பு:

https://www.hasil.gov.my/borang/program-memfail-borang-nyata-ckm/

ஆங்கில மொழி பதிப்பு:

https://www.hasil.gov.my/en/forms/cgt-return-form-filing-programme

இதுகுறித்த ஐயப்பாடுகள் அல்லது தகவல்களுக்கு

    i.  ஹாசில் தொடர்பு மையம் 603-8911 1000 அல்லது 603-8911 1100 
      (வெளிநாடு)ஆகிய  எண்கள் அல்லது 

ii. ஹாசில் நேரலை அரட்டை https://maklumbalaspelanggan.hasil.gov.my/Public/
ஹாசில் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் வலம் வரலாம்.