spot_img
9.6 C
London
spot_img
Home சமூகம் மின் கட்டண சீரமைப்பு மீது மை பவர் காப்பரேஷன் ஆய்வு -டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப்

மின் கட்டண சீரமைப்பு மீது மை பவர் காப்பரேஷன் ஆய்வு -டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப்

0
284

புத்ராஜெயா, பிப்.1-

மின் கட்டண சீரமைப்பு மீது மை பவர் காப்பரேஷன் நிறுவனம் தற்போது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவு உண்மையான செலவுகளை எடுத்துரைக்கும் கட்டண கட்டமைப்பை நிர்மாணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சருமான டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் தெரிவித்தார்.

இப்புதிய கட்டமைப்பு 2025-2027 கால கட்டத்தை உட்படுத்திய 4ஆவது ஊக்குவிப்பு அடிப்படையிலான ஒழுங்குமுறை கண்காணிப்பு கால கட்டத்திற்கேற்ப அடுத்தாண்டில் அமல்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1990களில் மின் உற்பத்தித் துறையின் பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டதால் இவ்விவகாரம் மீது சட்டத் திருத்தம் மேற்கொள்வதில் நியாயமில்லை என்றார் அவர்.

எரிசக்தி புத்தாக்கத்தில் மலேசிய திட்ட அலுவலகத்தில் அமைச்சின் வாயிலாக அமல்படுத்த புதிய மின் கட்டண அமலாக்கத்திற்கு மின்சார கையிருப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய போது பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான பாடில்லா யூசோப் குறிப்பிட்டார்.  

-மலேசியா கினி