spot_img
9.6 C
London
spot_img
Home மலேசியா கல்வி பள்ளி தொடக்கக்கட்ட உதவித் தொகை குறைக்கப்பட்டதற்கான புகார் பெறப்படவில்லை -துணை அமைச்சர் வொங் கா...

பள்ளி தொடக்கக்கட்ட உதவித் தொகை குறைக்கப்பட்டதற்கான புகார் பெறப்படவில்லை -துணை அமைச்சர் வொங் கா வோ

0
390

ஈப்போ, பிப்.1-


பள்ளி தொடக்கக்கட்ட உதவித் தொகை (பி.ஏ.பி.) குறைக்கப்பட்டதற்கான புகார் எதனையும் இதுவரை கல்வி அமைச்சு பெறவில்லை என்று துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.


குறிப்பிட்ட கட்டணங்களுக்காக பி.ஏ.பி குறைக்கப்பட்டது தொடர்பான புகாரைக் கடந்தாண்டு அமைச்சு பெற்றது. இருந்த போதிலும் இது ஒருசில சம்பவங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதாகும்

அத்தொகை முழுமையாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சு உத்தரவிட்டது.

அமைச்சைப் பொறுத்தவரை இந்த 150 வெள்ளி உதவி தொகை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தெளிவான ஒரு தகவலை அமைச்சு வழங்கி விட்டது, காரணம் மாணவர்களின் பள்ளி தொடக்கக்கட்ட சுமைகளைக் குறைக்க இது பேருதவியாக இருக்கும்.


இந்த ஆண்டில் நாம் இன்னும் எந்தவொரு புகாரையும் பெறவில்லை. இதில் உதவி தொகை வழங்கலும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த நல்ல சூழல் தொடரப்படும் என்று அமைச்சு எதிர்பார்ப்பதாக இங்குள்ள யுக் சோய் இடைநிலைப்பள்ளியில் பேரா மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட கல்வி இலாகாக்களுக்கும் உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான வொங் கா வோ குறிப்பிட்டார்.

-சினார் ஹாரியான்