spot_img
9.6 C
London
spot_img
Home வர்த்தகம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு & நடுத்தர தொழிற்துறையின் பங்களிப்பு அளப்பரியது! -டத்தோ ரமணன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு & நடுத்தர தொழிற்துறையின் பங்களிப்பு அளப்பரியது! -டத்தோ ரமணன்

0
477

கோலாலம்பூர், பிப்.3-

நாட்டின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் சிறு  மற்றும் நடுத்தர தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள். இதன் பொருட்டு இத்தொழிற்துறை நாட்டிற்கு மிக முக்கியம் என்று தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இத்துறையினர் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை என்பதைக் கண்டறிந்து இவர்களுக்கு எந்த வகையில் உதவி நல்க முடியும் என்பதை   தமது அமைச்சு ஆராயும் என்றார் ரமணன்.

“சிறு  மற்றும் நடுத்தர தொழிற்துறையினரான மிம்கோய்ன் உறுப்பினர்கள் நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு, அந்நிய தொழிலாளர்களுக்கான தேவை போன்ற பல்வேறு சவால்களை இவர்கள் சந்தித்து வருகின்றனர்.இவர்களுக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து நாங்கள் ஆராய்வோம்” என்று இங்குள்ள மெட்ரேட் மாநாட்டு மண்டபத்தில் மிம்கோய்ன் ஏற்பாட்டிலான வர்த்தக கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத்  தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

அதே சமயம், ஒரு கோரிக்கையை அனைவரும் ஒருமித்த குரலாக முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அதன் தேவையை பிரதமராலும் உணர முடியும். ஆகையால், ஒற்றுமையோடு செயலாற்றினால்தான் எதிலும் வெற்றியைப் பார்க்க முடியும் என்றார்.

“சிறு  மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் எஸ்எம்இகார்ப், பேங்க் ராக்யாட், அமானா இக்தியார் மலேசியா போன்றவற்றின் வாயிலாக நிதியுதவி மற்றும் வழிகாட்டிகளை இவர்கள் பெறலாம்” என்று துணையமைச்சர் மேலும் சொன்னார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக மற்றும் தொழிலியல் சபையின் (மிம்கோய்ன்) ஏற்பாட்டிலான இக்கருத்தரங்கம் இச்சமூகத்தினர் வர்த்தகத்தில் அடுத்த இலக்கை அடைவதற்குத் துணை புரியும் என்று முன்னதாக இதனைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் ரமணன் குறிப்பிட்டார்.

மிம்கோய்ன் தலைவர் ஹாஜி டத்தோ ஜமாருல் கான் ஹாஜி எம்.எஸ். காதிர், கோலாலம்பூர் பொருளாதார கிளப் தலைவர் டத்தோஸ்ரீ முகமது இக்பால் ராவுத்தர், இக்கருத்தரங்கு மற்றும் விருதளிப்பு விழா ஏற்பாட்டு குழு தலைவரும் மிம்கோய்ன் துணைத் தலைவருமான டத்தோ ஹாஜி அப்துல் ஹாமிட் பி.வி. அப்டு ஆகியோரும் இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.