spot_img
8.9 C
London
spot_img
Home சமூகம் சிறப்பு செயலகத்தை மித்ரா அமைக்க வேண்டும்! -டத்தோ சிவராஜ் வலியுறுத்து

சிறப்பு செயலகத்தை மித்ரா அமைக்க வேண்டும்! -டத்தோ சிவராஜ் வலியுறுத்து

0
352

கோலாலம்பூர், பிப்.14-

    இந்திய சமூக விவகாரங்களைப் பாதுகாக்கவும் வியூகங்களை வரைவதற்கும் 3 சிறப்பு செயலகங்களை மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு (மித்ரா) அமைக்க வேண்டும் என்று மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் வலியுறுத்தினார்.

    இந்த 3 செயலகங்களை அமைப்பது மித்ராவின் கீழ் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்ற அதன் புதிய தலைவர் பி.பிரபாகரனின் பரிந்துரைக்கேற்ப உள்ளது.

   “இந்திய சமூகம் எதிர்நோக்கக்கூடிய சிரமங்கள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண பல்கலைக்கழகம், போலிடெக்னிக் , மெட்ரிகுலேஷன் ஆகியவற்றில் மாணவர்கள் நுழைவை நிர்வகிக்கும் செயலகச் செயலாளரை மித்ரா அமைக்க வேண்டும் என்று நான் பரிந்துரை செய்கிறேன்” என்றார்.

   தெக்குன், அக்ரோ வங்கி, சிறு-நடுத்தர தொழில்துறைகளுக்கான மானியம் உட்பட சமூகத்துடனான அனைத்துத் திட்டங்கள், முயற்சிகளை எளிதாக்கி துரிதப்படுத்த இந்திய வர்த்தக மேம்பாட்டு செயலகத்தை அமைக்க வேண்டும்.

   மூன்றாவதாக, நகர்ப்புற இந்தியர்களின் வறுமையைத்  துடைத்தொழித்துத் தீர்வுகாணும் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று தமது முகநூல் பதிவில் செனட்டர் சிவராஜ் குறிப்பிட்டார்.

-மலேசியா கினி