spot_img
9.2 C
London
spot_img
Home சமூகம் மடானி அரிசி விவகாரம்: மக்களிடையே குழப்பம்

மடானி அரிசி விவகாரம்: மக்களிடையே குழப்பம்

0
260

பெட்டாலிங் ஜெயா, பிப்.15-

உள்நாட்டு வெள்ளை அரிசி (எஸ்.எஸ்.டி.) மற்றும் இறக்குமதி வெள்ளை அரிசி (எஸ்.எஸ்.ஐ.) ஆகியவற்றுக்கு பதிலாக வரும் 19ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி அமலுக்கு வரும் மலேசிய மடானி வெள்ளை அரிசி குறித்து அரசாங்கம் மேல் விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மலேசிய மடானி வெள்ளை அரிசியை ஒற்றைப் பிரிவாக்குவதற்கு எஸ்.எஸ்.டி. மற்றும் எஸ்.எஸ்.ஐ. பிரிவுகள் அகற்றப்பட்டு விட்டதாக மைடின் பேரங்காடியின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் வீரா அமீர் அலி மைடின் தெரிவித்தார்.

இதில் எஸ்.எஸ்.ஐ. அரிசியை அரசாங்கத்தால் அகற்ற முடியாது, காரணம் அது இறக்குமதி அரிசியாகும். அதிலும் இதற்கு முன் 40 வெள்ளிக்கு விற்கப்பட்ட 10 கிலோ அரிசியை 30 வெள்ளியாகக் குறைப்பதும் சாத்தியமாகாது.

அதன் பிறகு சந்தைகளில் அரிசி கையிருப்புக்கு மிகவும் சிக்கலாகி விடும். “இதற்கு தகுந்த விளக்கத்தைத் தொழில்துறை தரப்பிலிருந்து நாங்கள் கோருகிறோம்” என்று செய்தியாளர்களிடம் அமீர் அலி பேசினார்.

-எப்.எம்.டி.