spot_img
11.3 C
London
spot_img
Home சமூகம் நைகல் கார்டனர் வீடமைப்பு & புக்கிட் தாகார் சாலை விவகாரம்: பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்...

நைகல் கார்டனர் வீடமைப்பு & புக்கிட் தாகார் சாலை விவகாரம்: பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் டாக்டர் சத்தியபிரகாஷ்

0
222

கோல குபு பாரு 26-

இங்குள்ள நைகல் கார்டனர் வீடமைப்பு மற்றும் புக்கிட் தாகார் சாலை பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளார் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ்.

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து இழுபறியாக உள்ளன.

இதன் காரணமாக விரைவில் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய சமுதாயத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என்றார்.

இவ்விவகாரத்தை கெஅடிலான் உச்சமன்றக் கூட்டத்திற்குத் தான் கொண்டு சேர்த்திருப்பதாக டாக்டர் சத்திய பிரகாஷ் குறிப்பிட்டார்.

உலுசிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாநில உச்சமன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சத்திய பிரகாஷ் எடுத்துரைத்துள்ளார்.

கடந்த மாநில சட்டமன்ற தேர்தலின் போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீ கீ இயோங் சார்பில் இந்த விவகாரம் குறித்து வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரமும் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் நம்பிக்கைத் தெரிவித்தார்.