காஜாங், ஏப்.29-
டாக்டர் சுரேந்திரனை தலைவராகக் கொண்ட உலு லங்காட் மைபிபிபி தொகுதி ஏற்பாட்டில் ஆசிரியர் கணேஷ் இராமின் ‘புதிய பாதை & NEW PATH’ எனும் நூல்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டன.
காஜாங், சுங்கை சுவாவில் அமைந்துள்ள இக்கட்சியின் சேவை மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மைபிபிபி கட்சியின் சிலாங்கூர் மாநில இடைக்கால தலைவருமான டாக்டர் சுரேந்திரன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் சிறப்பு வருகை புரிந்த மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் நூல்களை வெளியீடு செய்தார்.

ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளில் அறிவியல் புத்தாக்கத் தகவல்களை உள்ளடக்கிய இந்நூல்களைப் படைத்த ஆசிரியர் கணேஷ் இராமைப் பாராட்டியதோடு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார் டாக்டர் லோக பாலா.
தலா ஒரு நூல் என சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்நூல்களை மைபிபிபி சிலாங்கூர் மாநிலம் வழங்கியது.
இந்நூல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் துணைத் தலைவரும் செந்தோசா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான தமிழரசு சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.





