spot_img
9.2 C
London
spot_img
Home தேர்தல் கோல குபு பாரு இடைத்தேர்தல்: சரியான தலைவர் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் டாக்டர் ராமசாமிதான் பொறுப்பேற்க வேண்டும்!...

கோல குபு பாரு இடைத்தேர்தல்: சரியான தலைவர் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் டாக்டர் ராமசாமிதான் பொறுப்பேற்க வேண்டும்! -டத்தோ ரமணன் வலியுறுத்து

0
299

கோல குபு பாரு, ஏப்.29-

கோல குபு பாரு தொகுதியில் மேம்பாட்டைக் கொண்டு வருவதற்குச் சரியான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் அதற்கு மலேசிய மக்கள் உரிமை கட்சித் தலைவர் டாக்டர் ராமசாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

தேர்தல் பிரச்சாரம் வெற்றி பெறா விட்டால் வருங்காலத்தில் பிரச்சனை என வரும்போது அந்த முன்னாள் பினாங்கு மாநில 2ஆவது துணை முதல்வர்தான் கோல குபு பாரு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் இல்லாத கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று அத்தொகுதி மக்களுக்கு உதவாத பட்சத்தில் டாக்டர் ராமசாமி உதவி செய்ய முன் வருவாரா?

“தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாங்கள் ஒன்றும் மாநில அரசாங்கம் அல்ல, எங்களுக்கு ஒதுக்கீடு இல்லாததால் உதவி செய்ய முடியாது என்று காரணம் கூறுவர். அந்நேரத்தில் இவர் உதவி செய்வாரா என்று நான் கேட்கிறேன்” என்று கோல குபு பாரு மக்களுடன் வணக்கம் மடானி விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் பேசினார்.

-மலேசியா கினி