spot_img
7.7 C
London
spot_img
Home சமூகம் இந்தியர்களின் விவகாரத்தைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

இந்தியர்களின் விவகாரத்தைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

0
213

பெட்டாலிங் ஜெயா, மே 2-

கோல குபு பாருவில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்குத் தலைவர்களுக்கிடையிலான வாக்குவாதம் தடையாக இருக்கும் என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கோடி காட்டினார்.

கடந்த 10 ஆண்டு காலமாக வறுமை, வேலை வாய்ப்பின்மை, குடியிருப்பு இல்லாதது உட்பட இன்னும் ஏராளமான தீர்க்கப்படாத பிரச்சனைகளை இத்தொகுதியிலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

வரும் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத்தேர்தலை முன்னிட்டு தகராறு செய்து நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் இந்த விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில்தான் அரசியல் தலைவர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது ஸ்பான் தலைவருமான சார்ல்ஸ் குறிப்பிட்டார்.