spot_img
7.7 C
London
spot_img
Home தேர்தல் வேட்பாளர்களின் கவனம் தொகுதி பிரச்சனைகள் மீது இருக்க வேண்டும்! -டத்தோ ரமணன் வலியுறுத்து

வேட்பாளர்களின் கவனம் தொகுதி பிரச்சனைகள் மீது இருக்க வேண்டும்! -டத்தோ ரமணன் வலியுறுத்து

0
311

உலு சிலாங்கூர், மே 2-

கோல குபு பாரு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய நிலையிலான விவகாரங்களைக் காட்டிலும் அத்தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர்  டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

பொதுவாக, வேட்பாளர்கள் உள்ளூர் விவகாரங்களை நன்கு அறிந்து வைத்திருப்பதோடு தொகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் விவாதிக்க வேண்டியது அவசியமாகும்.  

தங்களின் பிரச்சாரத்தில் வேறு எந்த விவகாரத்தைப் பற்றியும் பேசக் கூடாது, மாறாக உள்ளூர் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். தேசிய விவகாரங்களைப் பற்றிப் பேச இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. கோல குபு பாரு சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

இதில் இந்த அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குப் பயனானது இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் உட்பட மக்களுக்குப் பயனளிக்காது என்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் குறிப்பிட்டார்.