கோல குபுபாரு, மே 5-
இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த இங்குள்ள ஐந்து தோட்ட மக்களின் பிரச்சினைக்கு நாளை திங்கட்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
“இப்பிரச்சினை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரின் கவனத்திற்கு பல முறை நாங்கள் கொண்டு சென்றுள்ளோம்” என்றார் அவர்.
இதன் பொருட்டு நாளை சம்பந்தப்பட்ட தோட்டப் பாட்டாளிகளுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது என்று இங்கு எஸ்.பி.கே ஏற்பாட்டிலான மருத்துவ முகாமையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.





